புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு வரும் ஜூலை 5ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே 5ஆம் தேதி காலை 11 மணியளவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளார்.
'ஜூலை 8ஆம் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம்' - நிதிநிலை அறிக்கை விவாதம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதம் வரும் 8ஆம் தேதி முதல் தொடங்கும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
budget
இந்நிலையில், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் அதன் மீதான பொது விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும். இந்த விவாதம் ஜூலை 8ஆம் தேதி தொடங்கும் என நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதைத்தொடர்ந்து நிதி ஒதுக்கீடு தொடர்பான வாக்களிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் ஜூலை 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெறலாம் என நிதித்துறையின் பட்ஜெட் விவகாரப்பிரிவு தெரிவித்துள்ளது.