டெல்லி: மத்திய பட்ஜெட் 2021-22 இல் சுற்றுலாத்துறையினர் பல்வேறு நிவாரணங்கள் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்க்கின்றனர். அதில், பொதுமுடக்க காலல் மின்சார கட்டண விலக்கு, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் ஜிஎஸ்டி விலக்கு போன்றவை முக்கியமானவை ஆகும்.
சுபாஷ் கோயல் பேட்டி
இது குறித்து சுற்றுலா நிபுணரும், இந்திய சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் கூட்டமைப்பு கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான சுபாஷ் கோயல் ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசுகையில், “தற்போது வரை, ஹோட்டல்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் நிர்ணயிக்கப்படவில்லை, அதற்கான உள்ளீட்டு கடன் எங்களுக்கு கிடைக்கவில்லை. அதில் ஒரு நிலையான தொகையை நாங்கள் விரும்புகிறோம்.
முன்பு இது ஹோட்டல் வகையைப் பொறுத்து, 18 சதவீதமாக இருந்தது. பின்னர் அது 12 சதவீதமாக குறைக்கப்பட்டது. தற்போது ஹோட்டல் மற்றும் உணவகங்களில் 10 சதவீத சீரான ஜிஎஸ்டி வீதத்தை நாங்கள் விரும்புகிறோம். அதேபோல் கடன் வகைகளையும் விரும்புகிறோம்.
பெரும் பாதிப்பு- வேலை இழப்பு
பொதுமுடக்கத்தில், சுற்றுலாத் துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாகும். இந்தத் துறையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணியாற்றும் சுமார் 75 மில்லியன் (ஏழரை கோடி) மக்களில் - சுமார் 30 மில்லியன் (மூன்று கோடி) பேர் வேலை இழந்துள்ளனர். சுமார் 10 மில்லியன் (ஒரு கோடி) பேர் ஊதியமின்றி விடுப்பில் உள்ளனர்.
சுமார் 53,000 பயண முகவர்கள், 1.3 லட்சம் சுற்றுப்பயண ஆபரேட்டர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் உயிர்வாழ போராடுகிறார்கள் ”என்றார்.
நிவாரணம் கிடைக்குமா?
இது குறித்து சுற்றுலா நிபுணர் ஒருவர் கூறுகையில், “மற்ற நாடுகளைப் போலவே, சுற்றுலாத் துறைக்கு அரசாங்கத்திடமிருந்து போதிய நிதி உதவி கிடைக்கவில்லை. ஆகவே, இந்தத் தொழில் புத்துயிர் பெறவும், மில்லியன் கணக்கான மக்களின் வேலைகள் பறிபோகாமல் தடுக்கவும், இந்தப் பட்ஜெட் எங்களுக்கு சிறிது நிவாரணம் அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தின் பிற எதிர்பார்ப்புகளைப் பற்றி பேசிய சுபாஷ் கோயல், “சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் ஆண்டு வரியில் விலக்கு வேண்டும். இது அத்தொழிலை நீட்டிக்க செய்யும். மேலும், பொதுமுடக்க காலத்தில் மின்சாரம், கலால் கட்டணம், போக்குவரத்து அனுமதி போன்ற அனைத்து சட்டரீதியான கொடுப்பனவுகளிருந்தும் விலக்கு அளிக்கப்பட வேண்டும்” என்றார்.
மூடலின் விளிம்பில் 90 சதவீத ஹோட்டல்கள்
முன்னதாக ஹோட்டல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (HAI) வழங்கிய பட்ஜெட்டுக்கு முந்தைய பரிந்துரைகளில், சுற்றுலாதுறை இயல்பு நிலைக்கு விரைவாக திரும்புவதில் அரசாங்கத்தின் ஆதரவு முக்கியமானது. அதன்படி வரி விகிதங்களில் விலக்கு தேவை என அறிவுறுத்தியிருந்தது.
மேலும், நாட்டில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் சுமார் 40 சதவீதம் நிரந்தர மூடலின் விளிம்பில் இருப்பதாக மதிப்பிட்டுள்ளன. இது சகஜ நிலைக்கு திரும்ப, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பிடிக்கும் என்றும் ஹோட்டல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நடப்பு மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா?