கோவிட்-19 முடக்கம் காரணமாக உலகளவில் சுற்றுலாத் துறை பெரும் பாதிப்பைச் சந்தித்தது. இந்தியாவில் பெருந்தொற்று குறைந்து காணப்படுவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தற்போது தாக்கல்செய்யப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத் துறை நிதிநிலை அறிக்கையை பெருமளவில் எதிர்பார்த்து இருந்தது.
இந்நிலையில் நிதிநிலை அறிக்கை குறித்து, இந்திய சுற்றுலாத் துறை கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், சுற்றுலாத் துறை வல்லுநருமான சுபாஷ் கோயல் ஈடிவி பாரத்திடம் தனது பிரத்யேக கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அதில் சுற்றுலாத் துறைக்கு நிதிநிலை அறிக்கையில் ஏமாற்றமே மிஞ்சியதாகக் கூறியுள்ளார்.