தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பட்ஜெட் 2019: பாதுகாப்புத்துறை சார்ந்து பெரும் அறிவிப்புகள் வருமா? - பட்ஜெட் 2019

பாஜக தலைமையிலான மத்திய அரசு தேச பாதுகாப்பை தனது முக்கிய கொள்கை முடிவாகக் கொண்டுள்ள நிலையில், பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறை நிதி ஒதுக்கீட்டுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

def

By

Published : Jul 1, 2019, 1:39 PM IST

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 5ஆம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவுள்ள நிலையில் பாதுகாப்புத் துறை அறிவிப்பு சார்ந்து உட்சபட்ச எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முக்கியத்துவத்தின் பின்னணி:

பாதுகாப்புத் துறை மீது இந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளதற்க்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. கடந்த மோடி ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன்தான் பதவி வகித்தார். எனவே பாதுகாப்புத்துறையின் தேவை குறித்து நன்கறிந்த நபரே இம்முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது தனிக்கவனத்தைப் பெற்றுள்ளது. மேலும், தேசியப் பாதுகாப்பு என்ற அம்சம் பாஜகவின் பிரதான கொள்கையாக உள்ளது. குறிப்பாக சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பாலக்கோட் தாக்குதல் பாஜகவின் தேர்தல் வெற்றிக்குப் பெருமளவு உதவியதாகக் கருத்து நிலவி வருகிறது. எனவே இம்முறை பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறை சிறப்பு முக்கியத்துவம் பெறும் என அனைவரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு:

பாதுகாப்புத் துறை சார்ந்த முடிவுகள் அனைத்தும் சர்வதேச சூழலை ஒட்டியே எடுக்கப்பட்டுவருகிறது. உலகின் வல்லாதிக்க நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் அதே போல் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற அண்டை நாடுகளின் அரசியல் மற்றும் ராஜரீக உறவு முறைகளை வைத்தே நாட்டின் பாதுகாப்புத் துறையின் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. இந்தியா தனது ஜி.டிபி.யில் 1.5 சதவீத தொகையை பாதுகாப்புத்துறைக்குச் செலவிடுகிறது. அதேவேலையில் பாகிஸ்தான் 3.5 சதவீதமும், சீனா 2.5 சதவீதமும் செலவிடுகின்றன. சர்வதேச அளவில் அமெரிக்க அரசு பாதுகாப்புத் துறைக்கு அதிகளவிலான நிதியைச் செலவிடுகிறது.

இந்திய பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு என்பது இந்த நாடுகளின் போக்குகளைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. இந்நிலையில் மோடியின் கடந்த ஆட்சிக் காலத்தில் பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு 3 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டது. இது முந்தைய அளவைக்காட்டிலும் 6.96 சதவீதம் அதிகமாகும். இம்முறை இந்த தொகை மேலும் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சியாச்சின் பனிமலையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

சரியான விகிதத்தில் நிதி பயன்பாடு:

பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி வீரர்களின் ஊதியம், பணிக்கொடை, போக்குவரத்து போன்ற அம்சங்களுக்குப் பெருமளவு செலவு செய்யப்படுகிறது. இதன் காரணமாகப் பாதுகாப்பு உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படாமல் தேங்கியுள்ளது. குறிப்பாக ராணுவ உபகரணங்களை நவீன மையமாக்குதல், புதிய ராணுவத் தளவாடங்களை வாங்குதல், புதிய உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் பராமரிப்பு கட்டிடங்களை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வழிவகைகளை பாதுகாப்புத்துறை மேற்கொள்ள முன்வர வேண்டும்.

அத்துடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் நிதி கையிருப்பும் சில ஆண்டுகளாக மந்த நிலையில் உள்ளது. எனவே இம்முறை நிதி நிலை அறிக்கையில் துறை சார்ந்த நிதி ஒதுக்கீடு என்பது சவாலான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. எனவே நிதித்துறைக்குச் சீரான நிதியை ஒதுக்கி அதைத் தரமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதே நிபுணர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அமர்ஜவான் ஜோதியில் முன்னாள் பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ABOUT THE AUTHOR

...view details