தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இந்தியாவின் 'பொதுச் சுகாதாரம்' மேம்பட பில்கேட்ஸ் சொல்லும் வழி - பில்கேட்ஸ் பொது சுகாதாரம்

டெல்லி: தனியார் முதலீடு மற்றும் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு குறைந்த விலையில் இந்திய பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்த முடியும் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

Bill gates

By

Published : Nov 18, 2019, 8:52 AM IST

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபரான பில்கேட்ஸ் தனது மனைவி மிலின்டா கேட்ஸூடன் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது கேட்ஸ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு இந்தியா எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக வந்துள்ள அவர் இந்தியாவின் சுகாதாரம், வேளாண்மை, பின்தங்கிய மக்களின் நிதித் தேவைகள் குறித்துப் பேசினார்.

பொதுச்சுகாதாரம் குறித்து பேசிய பில்கேட்ஸ், 'இந்தியாவின் தற்போதைய முக்கிய தேவை பொதுச் சுகாதாரம். இந்தியாவின் பின்தங்கிய மக்களுக்குக் குறைந்த விலையில் பொதுச் சுகாதாரம் என்பதைச் செயல்படுத்த முடியும். இதை நடைமுறைப்படுத்தத் தனியாரின் பங்களிப்புதான் அடிப்படை. தனியார் முதலீடு சுகாதாரத்துறையில் அதிகரித்து தொழில்நுட்பத்தின் துணைகொண்டு பெரும்பான்மையான எளிய இந்திய மக்களுக்கு சென்றடையும்.

சுகாதாரம்தான் ஒரு சமூகத்தின் முதுகெலும்பு. இந்தியாவின் ஆரம்ப சுகாதார நிலையம் கடைக்கோடி மக்களுக்கான சுகாதார ஆதாரமாக விளங்குகிறது’ என்றார்.

இதையும் படிங்க: ஏடிபி பைனல்ஸ்: இளம் வயதில் கோப்பையை கைப்பற்றி அசத்திய சிட்சிபாஸ்!

ABOUT THE AUTHOR

...view details