தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

'பணப்புழக்கத்தை அதிகரிக்கக் கடன் மேளா!' - நிர்மலா சீதாராமன் - latest business news

டெல்லி: பணப்புழக்கத்தை அதிகரிக்க பொதுத் துறை வங்கிகள் வரும் நாட்களில் 400 இடங்களில் கடன் மேளா நடத்தும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Sitharaman

By

Published : Sep 20, 2019, 7:59 AM IST

நாட்டின் பொருளாதாரம் தற்போது மந்தநிலையில் உள்ளதாக மன்மோகன் சிங், ப. சிதம்பரம் உள்ளிட்ட பலரும் குற்றஞ்சாட்டிவருகின்றனர். அதை அரசு வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் பொருளாதார மந்தநிலையைச் சரி செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய நிர்மலா சீதாராமன், "வரும் செப்டம்பர் 20ஆம் தேதிவரை அரசு பொதுத் துறை வங்கிகள் வங்கி சாரா நிதி நிறுவனங்களுடன் இணைந்து 200 மாவட்டங்களில் கடனுதவி அளிக்கும் கூட்டங்களை நடத்தும்" என்றார்.

மேலும், "அதேபோல வரும் அக்டோபர் 10 முதல் 15 வரை மேலும் 200 மாவட்டங்களில் இந்தக் கூட்டங்கள் நடத்தப்படும். பெருநிறுவனங்கள் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் இதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வார்" என்றும் அவர் தெரிவித்தார்.

பண்டிகை காலம் வரவிருக்கும் நிலையில் மத்திய அரசின் இந்தக் கடன் மேளா நடவடிக்கை மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details