தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

தங்கம், வெள்ளி வாங்க சரியான நேரம் - பிளாட்டினம் விலை

இன்றைய தங்கம், வெள்ளி, பிளாட்டினத்தின் விலை குறைந்து காணப்படுகிறது.

தங்கம், வெள்ளி வாங்க சரியான நேரம்
தங்கம், வெள்ளி வாங்க சரியான நேரம்

By

Published : Aug 30, 2021, 1:50 PM IST

கடந்த இரண்டு நாள்களில் இருந்த தங்கம் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து ரூ. 4,488 என விற்பனையாகிறது.

சவரனுக்கு 152 ரூபாய் என குறைந்து ரூ. 35,904 என விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாள்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 36,056 என இருந்தது. 24 காரட் தூய தங்கத்தின் விலை ரூ. 4,852 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 38,816 என விற்பனையாகிறது.

வெள்ளி

வெள்ளி விலை

வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ. 68.40-க்கு விற்பனையாகிறது. கிலோ வெள்ளி 300 ரூபாய் குறைந்து ரூ. 68,400 என விற்பனையாகிறது.

பிளாட்டினம் விலை

பிளாட்டினத்தின் விலை கடந்த இரண்டு நாள்களைத் தொடர்ந்து இன்றும் அதே விலைக்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் பிளாட்டினம் ரூ. 3,247 என நிர்ணயம் செய்யப்பட்டு, எட்டு கிராம் பிளாட்டினத்தின் விலை ரூ. 25,976 என விற்பனையாகிறது.

இதையும் படிங்க: 'புதிய ட்ரோன் விதிகள் 2021: வணிக செயல்பாடுகளின் புதிய நம்பிக்கை'

ABOUT THE AUTHOR

...view details