தமிழ்நாடு

tamil nadu

அப்பல்லோவுக்கு போட்டியாக களமிறங்கும் அமேசான் மருந்தகங்கள்!

By

Published : Aug 14, 2020, 1:25 PM IST

தற்போதைய மருத்துவ அவசர காலத்தின் இடையே அமேசான் இந்தியா நிறுவனம், ‘அமேசான் பார்மசி’ எனும் தன் முதல் மருந்தகத்தை கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் தொடங்கியுள்ளது.

அமேசான் பார்மசி
அமேசான் பார்மசி

மின்னணு வணிகத்தின் சக்கரவர்த்தியான அமேசான் இந்தியா நிறுவனம், கரோனா சூழலில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ‘அமேசான் பார்மசி’ எனும் தனது முதல் மருந்தகத்தை திறந்துள்ளது.

முதலில் பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் கிளைகள், தொடர்ந்து நாடு முழுவதிலும் உள்ள நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்தக சந்தையில் தற்போது வலுவாக 3000 கிளைகளுக்கு மேல் கொண்டிருக்கும் அப்பல்லோ மருத்துவமனைகள் நிறுவனத்தின் அப்பல்லோ பார்மசிக்கு, இது பெரும் போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாதம் 499 ரூபாய் சந்தா விலை: பேடிஎம் நிறுவனத்தின் புதிய கையடக்க பிஓஎஸ் கருவி!

இது குறித்து பேசிய அமேசான் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர், “கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் அமேசான் பார்மசி தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகள், ஆரோக்கியம் சார்ந்த மருத்துவ உபகரணங்கள், அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்துகள் என அனைத்து விதமான மருந்து பொருட்களையும் இணையம் மூலமாகப் பதிவு செய்தோ, நேரடியாகவோ சென்று பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

கரோனா காலத்தில் இணைய மருந்தக விற்பனையில் புதிய தொழில் முனைவு நிறுவனங்களான 1எம்ஜி, பார்ம்-ஈசி, மெட்லைஃப் ஆகியவை சந்தையில் பெரும் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details