தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ப்ரியாரிட்டி 4ஜி நெட்வொர்க்: வாடிக்கையாளர்களை கவர ஏர்டெல் நிறுவனத்தின் புதிய திட்டம் - ப்ரியரிட்டி 4ஜி நெட்வொர்க்

டெல்லி: போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ப்ரியாரிட்டி 4ஜி நெட்வொர்க் என்ற புதிய திட்டத்தை ஏர்டெல் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

Airtel
Airtel

By

Published : Jul 6, 2020, 8:55 PM IST

இந்திய டெலிகாம் துறையில் தனிக்காட்டு ராஜாவாக ஏர்டெல் நிறுவனம், ஜியோவின் வருகைக்கு பின் கடும் போட்டியைச் சந்தித்துவருகிறது. வாடிக்கையாளர்களை கவர ஏர்டெல் நிறுவனம் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திவருகின்றன.

இந்நிலையில், தனது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ப்ரியாரிட்டி 4ஜி நெட்வொர்க் என்ற புதிய திட்டத்தை ஏர்டெல் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. மாதம்தோறும் 499 ரூபாய்க்கு மேல் ரிசார்ஜ் செய்யும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் அனைவரும் பிளாட்டினம் வாடிக்கையாளர்களாக கருதப்படுவார்கள் என்றும், அவர்கள் அனைவரும் இத்திட்டத்தில் இணைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் ஏர்டெல் செயலியில் பிரத்யேகமாக Platinum UI வடிவமைக்கப்பட்டிருக்கும். மேலும், கஸ்டமர் கேரிலும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவுக்கான தலைமை அலுவலர் சஷ்வத் சர்மா கூறுகையில், "Airtel Thanks திட்டத்தின் ஒரு பகுதியாக எங்கள் பிளாட்டினம் வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவை அனுபவத்தை வழங்குவதற்கான முயற்சியாக இது அமைந்துள்ளது. அவர்களுக்கு கூடுதல் சேவை அனுபவத்தை வழங்க முயல்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: ஜூம் செயலிக்கு சிறந்த மாற்றாக இருக்குமா ஜியோ மீட்?

ABOUT THE AUTHOR

...view details