இதுகுறித்து விளம்பர தர நிர்ணய கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்தம் 231 விளம்பரங்களுக்கு எதிராகப் புகார்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், அதில் 67 விளம்பரங்கள் தொடர்பான புகார்கள் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரிக்கப்பட்ட 164 விளம்பரங்களில் 132 விளம்பரங்கள் பயனாளர்களைத் திசை திருப்புவதாக அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
டேங், டெட்லி கிரீன் டீ விளம்பரங்கள் தவறாகவுள்ளன - விளம்பர தர நிர்ணய கவுன்சில்!
மும்பை: இந்த ஆண்டு மே மாதம் மட்டும் 132 விளம்பரங்களுக்கு எதிராக விசாரணை மேற்கொண்டிருப்பதாக விளம்பர தர நிர்ணய கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதில், 'டேங் ஹேல்த் ட்ரிங்' விளம்பரத்தில் தண்ணீருக்கு பதில் 'டேங் ஹேல்த் ட்ரிங்கை' அருந்துவது போதுமானது என குறிப்பிடப்பட்டிருந்தது. தண்ணீருக்கு மாற்றாக 'டேங் ஹேல்த் ட்ரிங்கை' பரிந்துரை செய்திருந்ததற்கு விளம்பர தர நிர்ணய கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும், டாடாவின் 'டெட்லி கிரீன் டீ' போதிய ஆதாரமின்றி 9/10 பேர், இதனை பரிந்துரை செய்கின்றனர் என விளம்பரம் செய்வது பற்றியும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது . அதேபோல ஆப்பிள் ஐபோன் XS விளம்பரமும் தெளிவில்லாமல் பயனாளர்களைத் திசை திருப்புவதாக அமைந்துள்ளது என விளம்பர தர நிர்ணய கவுன்சில் தெரிவிக்கிறது.