தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஆண்டு ஜிஎஸ்டியை தாக்கல் செய்த 92 விழுக்காடு பெரிய நிறுவனங்கள்

டெல்லி: 2017-18ஆம் நிதியாண்டில், ரூ.2 கோடிக்கும் மேல் வருமானம் பெற்ற 92 விழுக்காடு பெரிய நிறுவனங்கள் உரிய தேதிக்குள் முறையாக வரி செலுத்திவிட்டன.

taxpayers filed annual returns for 2017-18 GST returns GST Network on annual returns filed GST tax business news ஆண்டு ஜிஎஸ்டியை தாக்கல் செய்த 92 விழுக்காடு பெரிய நிறுவனங்கள் ஜிஎஸ்டி, 2017-18ஆம் நிதியாண்டு, வரி
About 92% of large taxpayers filed annual returns for 2017-18: GSTN

By

Published : Feb 16, 2020, 11:06 PM IST

தகுதிவாய்ந்த பெரிய வரி செலுத்துவோரில், 91.3 விழுக்காட்டினர் 2020 பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் தங்கள் வருடாந்திர வருவாயைத் தாக்கல் செய்துள்ளதாக சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

வருடாந்திர வருவாய்

இதேபோல், 92.3 சதவீத தகுதி வாய்ந்த பெரிய வரி செலுத்துவோர் அந்த தேதிக்கு முன்பே தங்கள் நல்லிணக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். வருடாந்திர வருவாய் ரூ.2 கோடி வரை உள்ளவர்கள் விருப்பத்தின் பேரில் வருடாந்திர வருவாய் அறிக்கை தாக்கல் செய்யலாம்.

ஆனால் ரூ.2 கோடிக்கும் மேல் வருடாந்திர வருவாய் உள்ளவர்களுக்கு இது கட்டாயமாகும். அத்தகைய வரி செலுத்துவோர் ஜி.எஸ்.டி.ஆர் -9 சி எனப்படும் நல்லிணக்க சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும். இது ஜி.எஸ்.டி.ஆர் -9 ஐ தாக்கல் செய்த பின்னரே தாக்கல் செய்ய முடியும்.

அறிக்கை தாக்கல்

அந்த வகையில் ரூ.2 கோடிக்கு மேல் விற்றுமுதல் கொண்ட வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 12.42 லட்சம் என்று தரவு காட்டுகிறது. இது மொத்தம் 92.58 லட்சம் வழக்கமான வரி செலுத்துவோரில் 13.4 விழுக்காடு மட்டுமே.

இதன் பொருள் 80.16 லட்சம் வரி செலுத்துவோர் ஆண்டு வருமானத்தை தாக்கல் செய்ய கட்டாயமில்லை. இருப்பினும், ஜிஎஸ்டி புள்ளிவிவரங்கள், ஆண்டுக்கு ரூ.2 கோடி வரை வருவாய் ஈட்டிய 1.04 லட்சம் வரி செலுத்துவோர் நல்லிணக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

தவறினால் அபராதம்

சரக்கு சேவை வரியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வணிகங்கள் அதிகபட்ச வருமானத்தை பதிவு செய்த முதல் மூன்று மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா (96 சதவீதம்), ராஜஸ்தான் மற்றும் குஜராத் (தலா 95 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்கள் வகிக்கின்றன.

ஜி.எஸ்.டி.ஆர் 9 மற்றும் 9 சி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபட்டது. அந்த வகையில் பிப்ரவரி மாதம் 3, 5 மற்றும் 7 உள்ளிட்ட தேதிகள் நிர்ணயிக்கப்பட்டது. 2017-18ஆம் நிதியாண்டுக்கான வருமான வரியை உரிய காலத்துக்குள் தாக்கல் செய்யாமல் தாமதமாக செலுத்தினால் அபராதம் கட்ட நேரிடும் என்பது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க:அமித் ஷாவுக்கு, 'மூன்று யோசனை' அளித்த திக்விஜய் சிங்

ABOUT THE AUTHOR

...view details