கரோனா நெருக்கடியை மக்கள் சமாளிக்க உதவும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் 1, 2020 முதல் மே 31, 2020க்கு இடையில் அனைத்து கால கடன்களையும் திருப்பி செலுத்த மூன்று மாதம், கால அவகாசம் அளித்தது.
பிப்ரவரி 29, 2020 நிலவரப்படி தரமான அனைத்து கணக்குகளுக்கும் தடை விதிக்க ரிசர்வ் வங்கி அனுமதித்தது. இந்த தடைக்காலத்தை பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் 90 விழுக்காடு (தகுதிவாய்ந்தவர்கள் உள்பட) வாடிக்கையாளர்கள் பயன்படுத்த விண்ணப்பித்துள்ளனர்.
இதனை பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சஞ்சீவ் சாதா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'தடைகாலத்திற்கான நிறுத்திவைப்பு முறையை வங்கி ஏற்றுக்கொண்டது. அதாவது தகுதியான வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்' என்றார்.