நாட்டில் வருமான வரி செலுத்துவோர் பான் எண் வைத்திருப்பது கட்டாயமாகும். வரிதாக்கல் செய்யும் போது எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கவேண்டும் என மோடி தலைமையிலான அரசு உத்தவிட்டுருந்தது.
இந்த நடைமுறைகளால் பான் ஆதார் ஆகிய ஆவணங்கள் குறித்து பெரும் குழப்பம் நிலவியது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றிய நிர்மலா சீதாராமன், வருமான வரி தாக்கல் செய்ய பான் அல்லது ஆதார் ஆகிய இரண்டில் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்தால் போதும் எனத் தெரிவித்தார்.