தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

கோவிட்-19 காரணமாக இதுவரை 229 வரித்துறை ஊழியர்கள் மரணம் - அனுராக் தாக்கூர் அறிக்கை

கோவிட்-19 பாதிப்பு காரணமாக இதுவரை நிதியமைச்சகத்தின் வரித்துறையைச் சேர்ந்த 229 ஊழியர்கள் மரணமடைந்துள்ளனர்

Anurag
Anurag

By

Published : May 9, 2021, 5:38 PM IST

கோவிட்-19 காலத்தில் பணியிலிருந்த வரித்துறை அலுவர்கள் 229 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட்-19 காரணமாக பெரும் பாதிப்பிற்குள்ளான அமைச்சகங்களில் நிதியமைச்சகம் முதன்மையானது.

கோவிட் காலத்தில் பணியிலிருந்த வரித்துறை அலுவர்கள் 229 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதில் நேடி வரித்துறையை சேர்ந்தவர்கள் 119 பேர். மறைமுக வரித்துறை சேர்ந்தவர்கள் 100 பேர்.

இவர்களின் குடும்பத்தினருக்கு இந்நேரத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். தேசம் உங்களுக்கு பெருங்கடைமைப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நிதியமைச்சகம் சார்பில் அதன் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த மாதத்திற்குள் அனைத்து ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details