‘இரண்டாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நாட்டின் முதல் பெண் நிதயமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தார்’
பட்ஜெட் தாக்கல் நிறைவு: 11 மணிக்கு பட்ஜெட் அறிக்கை வாசிக்கத் தொடங்கி 2 மணி நேரம் 9 நிமிடங்களுக்குப் பின்னர் 1.09 மணிக்கு தனது உரையை நிறைவு செய்தார் நிர்மலா சீதாராமன்
1:10 PM
- அனைத்து மக்களிடமும் பட்ஜெட்டுக்காக பரிந்துரை பெறப்பட்டது.
- நிதி பற்றாக்குறை 3.4 விழுக்காட்டில் இருந்து 3.3ஆக குறைந்தது.
- நடப்பாண்டில் நாட்டின் பொருளாதாரம் 3 லட்சம் கோடி டாலராக உயரும்.
1:05 PM
- தங்கத்துக்கான இறக்குமதி வரி 10 விழுக்காட்டில் இருந்து 12.5ஆக உயர்வு
1.00 PM
- 2 முதல் 5 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டுபவர்கள் 3 விழுக்காடு வரை கூடுதல் வரி செலுத்த வேண்டும்.
- 5 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கான வரி 7 விழுக்காடாக உயர்வு.
- பெரும் பணக்காரர்களுக்கு வரி உயர்த்தப்படும்.
12:55 PM
- 120 கோடி இந்தியர்கள் ஆதார் காட்டு வைத்துள்ளனர். பான் கார்டு இன்றி ஆதார் கார்டு வைத்தும் வரி செலுத்தலாம்.
- வீட்டு கடன் வாங்குவோருக்கு 1.5 லட்சம் வரிச்சலுகை அளிக்கப்படும்.
12:50 PM
- உலக அளவில் மின்-வாகனங்கள் தயாரிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். மின்-வாகனங்கள் வாங்குவோருக்கு வரிச் சலுகை அளிக்கப்படும்.
- பெரும்பான்மையான நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி குறைப்பு
*மூன்று லட்சம் ரூபாயாக இருந்த தனி நபர் வருமான வரியின் உச்ச வரம்பு ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது*
பாண்டிய மன்னன் அறிவுடை நம்பிக்கு வரிவிதிப்பு தொடர்பான அறிவுரை வழங்க பிசிராந்தையார் பாடிய ‘காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே’ என தொடங்கும் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் உரை
12:40 PM
- உலகத் தரத்தில் 74 புதிய சுற்றுலா மையங்கள் அமைக்கப்படும்
- ரிசர்வ் வங்கி மூலம் வீடு கட்டித் தரும் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தப்படும்.
- மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய நாணயம் அறிமுகம்
- கடந்த 5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78 விழுக்காடு உயர்ந்துள்ளது.
- 400 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 25 விழுக்காடு வரி