தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

’இது ஸாக் ஸ்னைடர் வெர்சன்!’ - ஜஸ்டிஸ் லீக் டீஸர் வெளியீடு - ஸாக் ஸ்னைடர்

ஸாக் ஸ்னைடர் இயக்கிய ’ஜஸ்டிஸ் லீக்’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகி வைரலாகி உள்ளது.

Justice league
Justice league

By

Published : Jun 19, 2020, 6:43 PM IST

டிசி காமிக்ஸ் கதாபாத்திரங்களை வைத்து கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜஸ்டிஸ் லீக்'. இப்படத்தை முதலில் ஸாக் ஸ்னைடர் இயக்கி வந்தார்.

ஆனால் பல்வேறு காரணத்தினால் படத்தை முழுமையாக முடிக்க முடிக்காமல் படத்திலிருந்து வெளியேறினார். இதனால் மீதி இருந்த படப்பிடிப்பை 'அவெஞ்சர்ஸ்' பட இயக்குநர் ஜாஸ் வேடன் இயக்கினார்.

ஆனால் படம் வெளியிடப்பட்டபோது, ஸாக் ஸ்னைடர் இயக்கிய பகுதிகள் வரவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து ஸாக் ஸ்னைடர் இயக்கிய 'ஜஸ்டிஸ் லீக்' படத்தை வெளியிட வேண்டும் என சமூக வலைதளங்களில் கடந்த நான்கு வருடங்களாக ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் ஸாக் ஸ்னைடர், தான் இயக்கிய ஜஸ்டிஸ் லீக் HBO Max தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தற்போது அறிவித்துள்ளார். மேலும் அப்படத்தின் டீஸரை ஸாக் ஸ்னைடர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஸாக் ஸ்னைடர் இயக்கிய சுமார் 34 நொடிகள் நீள டீஸர் தற்போது இணையத்தில் வைரலாகிய உள்ளது. மேலும் இத்திரைப்படம் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க :கால் கடோட் மிரட்டும் 'வொண்டர் வுமன் 1984' - டிரெய்லர் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details