தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

நாடாளுமன்றம் செல்கிறார் எழுத்தாளர் வெங்கடேசன்!

மதுரை: மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளரான எழுத்தாளர் சு. வெங்கடேசன், ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

எழுத்தாளரை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கிய மதுரை மக்கள்

By

Published : May 23, 2019, 11:41 PM IST

பெயர்: சு. வெங்கடேசன்

கட்சி: சிபிஐ (எம்)

தொகுதி:மதுரை

இந்தியாவில் 17ஆவது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில், மதுரை மக்களவைத் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரும், எழுத்தாளருமான சு. வெங்கடேசன் ஒரு லட்சத்து, 39 ஆயிரத்து 395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குறித்த தவல்கள்:

தமிழ்நாட்டில் சாகித்ய அகாதமி விருது பெற்ற சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினர். கடந்த 29 ஆண்டுகளாக கட்சி உறுப்பினராகவும், 28 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராகவும் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றிய அவர், தற்போது மாநிலத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். அரசியலில் கால்பதிக்கத் தயங்கும் மற்ற எழுத்தாளர்களில் இவர் துணிந்து போட்டியிட்டி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details