தெற்கு கொல்கத்தாவில் ரீஜண்ட் பார்க் என்ற பகுதியில் வசித்துவருபவர் பிரியங்கா புராகயஸ்தா. இவர் கல்லூரியில் படித்துவந்தார். இந்நிலையில் நேற்று காலை எட்டு மணியளவில் இவர் தனது வீட்டு முன்பு இளைஞர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த இளைஞர் ஜெயந்தா ஹால்டர் என்பதும், அவரும் சுட்டுக்கொல்லப்பட்ட பெண்ணும் காதலர்கள் என்பதும் தெரியவந்தது.