தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: காட்டுப்பன்றி உயிரிழப்பு! - Courtallam five falls

தென்காசி: குற்றால அருவியின் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய காட்டுப்பன்றியை வனத்துறையினர் அப்புறப்படுத்தினர்.

Wild boar died in floods in Courtallam
Wild boar died in floods in Courtallam

By

Published : Aug 5, 2020, 2:07 AM IST

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குற்றால பேரருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. சுற்றுலாத் தளங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதால் அருவிக்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

இதனிடையே, ஐந்தருவியில் காட்டுப்பன்றி ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. சுமார் 50 கிலோ எடையுடன் கூடிய இந்த காட்டுப்பன்றி அதிகமான நீர்வரத்து இருப்பதால் வெள்ளத்தில் அடித்து இழுத்து வரப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்து வந்த குற்றாலம் வனத்துறையினர், காட்டுப்பன்றியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details