தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் காவிரி நீரின் அளவு 500 கன அடி உயர்ந்து 2 ஆயிரத்து 700 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு இரண்டாயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று(ஜூன் 18) ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 2200 கன அடியாக குறைந்தது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தருமபுரி: காவிரி கரையோரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 2700 கன அடியாக அதிகரித்துள்ளது.
Water level increased
தற்போது இரண்டு தினங்களாக காவிரி கரையோர பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 500 கனஅடியாக உயர்ந்து 2 ஆயிரத்து 700 கன அடியாக அதிகரித்துள்ளது.