தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தகுந்த இடைவெளியா..? அப்படின்னா..? - காற்றில் பறக்கும் பேருந்து விதிமுறைகள்

மதுரை: மாநகர பேருந்துகளில் தகந்த இடைவெளி மருந்துக்கும் கூட கடைப்பிடிக்கப்படாமல் அரசின் விதிமுறைகள் காற்றில் பறக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

  சமூக இடைவெளியா..? அப்படின்னா..? - காற்றில் பறக்கும் பேருந்து விதிமுறைகள்
சமூக இடைவெளியா..? அப்படின்னா..? - காற்றில் பறக்கும் பேருந்து விதிமுறைகள்

By

Published : Jun 6, 2020, 12:33 AM IST

கரோனா ஊரடங்கு அறிவிப்புக்குப் பிறகு கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகள், 50 விழுக்காட்டுக்கும் குறைவான அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. 60 சதவீத பயணிகள் ஏறிக் கொள்ளும் வகையில் உரிய விதிமுறைகளும் வகுக்கப்பட்டிருந்தன.

இதற்காக போக்குவரத்து துறை அனுமதியுடன், "இருக்கைகளில் அமர தடை" என்று வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. இருந்தபோதிலும் சுமார் 110 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்கி வருகிறார்கள்.

இன்று காலை திருமங்கலம் - ஆரப்பாளையம் செல்லும் அரசு பேருந்தில் (எண்TN58N2503), அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி அனைத்து இருக்கைகளையும் முழுவதுமாக நிரப்பி, பயணிகளை நிற்க வைத்தும் பயணம் செல்வதை அதில் பயணம் செய்த ஒருவர் இணையத்தில் தற்போது பதிவிட்டு உள்ளார்.

நோய் தொற்று பரவும் அபாயம் உள்ள இந்த நேரத்தில் குறிப்பாக வயதானவர்கள் அதிக அளவில் செல்லும் பேருந்தில் இப்படியான பயணம் ஆபத்தானது. அரசு போக்குவரத்து கழகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமா என அவர் கேள்வியும் எழுப்பி உள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details