அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை மற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பெரும் அளவில் கால்நடைகள் உயிரிழக்கும் என்ற அச்சம் விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது. எனவே இவற்றை தவிர்க்கும் வகையில், கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பு ஊசி போடப்படுகிறது.
மேலும், மாடுகள் எண்ணிக்கை கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. மாடுகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க, மாடுகளின் காதில் எண்ணிக்கை பொருந்திய அட்டை மாட்டிவிடப்படுகிறது.