தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 8, 2020, 3:47 PM IST

ETV Bharat / briefs

கரோனா கொள்ளை: இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.16 லட்சம் அபராதம்!

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பல நாட்களாக இந்த மருத்துவமனைகள் மீது பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து, தானே மாநகராட்சி நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

over charged corona hospital
over charged corona hospital

மும்பை: எந்தக் காரணமும் இல்லாமல் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக மாவட்டத்தின் இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்குத் தானே மாநகராட்சி (டி.எம்.சி) அபராதம் விதித்துள்ளது.

இந்த இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கும் மாநகராட்சி நிர்வாகம் விதித்த அபராதத் தொகையானது ரூ.16 லட்சமாகும். பல நாட்களாக இந்த மருத்துவமனைகள் மீது பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து, தானே மாநகராட்சி நிர்வகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த மருத்துவமனைகள் தானேவில் வசிக்கும் 13 பேரை, நோய் வாய்ப்படாமல் அனுமதித்து சிகிச்சையளித்துள்ளன. மேலும், ஏழு நாட்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து, முடிவில், லட்சம் ரூபாய் வசூல் கொள்ளை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக புகார் வந்த பின்னர், தானே மாநகராட்சி இந்த இரண்டு மருத்துவமனைகள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளது.

நோயாளிகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்காக மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது மாநிலத்தில் இதுவே முதல்முறை.

தானே மாநகராட்சி நிர்வாகத்துக்கு இதே போன்ற பல புகார்கள் வந்துள்ளன. ஏற்கெனவே தைரோகேர் நிறுவனத்துக்கு சளி சோதனை செய்வதை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சில ஆய்வகங்கள் பரிசோதனைகள் நடத்தி எதிர்மறையான முடிவுகளைத் தருகின்றன என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details