தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

போலி மதுபானங்கள் தயார் செய்த இருவர் கைது! - போலி மதுபானம்

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே வீட்டில் போலி மதுபானங்கள் தயார் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Two arrested for preparing fake liquor In Krishnagiri
Two arrested for preparing fake liquor In Krishnagiri

By

Published : Aug 28, 2020, 9:59 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகேயுள்ள கொளுத்திக்கொட்டாய் கிராமத்தில், வீட்டிலேயே போலி மதுபானங்கள் தயார் செய்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அதில், ஒரு வீட்டில் போலி மதுபானங்கள் தயாரிப்பது உறுதியானது. இதையடுத்து, அதே கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி (40), சரவணன் (45) ஆகிய இருவரையும் மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும், போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய 105 லிட்டர் எரிசாராயம், மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ரசாயனங்கள், மூடிகள், பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details