தமிழ்நாட்டில் கரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் கரோனா சிகிச்சைகளுக்கு படுக்கை வசதிகளை கூடுதலாக ஏற்படுத்த 70 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைக்க, சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகளுக்கு நடவடிக்கை! - தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை
சென்னை: தமிழ்நாட்டில் 70 தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
TN Government Corona Treatment Announcement
முதல்கட்டமாக, 30 தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் உள்ள 19 கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளை கரோனா பராமரிப்பு மையங்களாக மாற்ற தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.