பெரம்பலூர் நகர்புற பகுதி வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த முருகேசன், சங்கு பேட்டை பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார், விஸ்வா ஆகிய மூன்று பேர் மீது பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை வழக்கில் கைதான மூவர் மீது குண்டர் சட்டம்! - குண்டர் சட்டத்தில் கைது
பெரம்பலூர்: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.
Three accused arrested in kundas act
இந்த மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று மாவட்ட ஆட்சியர் சாந்தா மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட காவல் நடவடிக்கைகளை காவல் துறை தீவிரப்படுத்தி வருகிறது.