திமுக கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.
சான்றிதழ் பெற்றார் திருமாவளவன் - சிதம்பரம் மக்களவைத் தொகுதி
அரியலூர்: சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றதற்கான, சான்றிதழை விசிக தலைவர் தொல். திருமாவளவன் பெற்றார்.
சான்றிதழ் பெற்றார் திருமாவளவன்
இதில், தமிழ்நாட்டில் மற்ற தொகுதிகளை விட சிதம்பரம் தொகுதியில் தொல். திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், திருமாவளவன் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மக்களவை உறுப்பினராகவுள்ளார்.
இந்நிலையில், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற விசிக தலைவர் திருமாவளனுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் சான்றிதழ் வழங்கினார்.