தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சாலையின் குறுக்கே லாரியை நிறுத்தி வைத்த ஓட்டுநரால் பரபரப்பு

தஞ்சை: கிழக்குக் கடற்கரைச் சாலை பிரதான பகுதியில் லாரியை குறுக்கே நிறுத்தி வைத்த ஓட்டுநரால் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சாலையின் குறுக்கே லாரியை நிறுத்தி வைத்த ஓட்டுநரால் பரபரப்பு
சாலையின் குறுக்கே லாரியை நிறுத்தி வைத்த ஓட்டுநரால் பரபரப்பு

By

Published : Jul 24, 2020, 7:02 PM IST

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் மிக முக்கிய வணிகரீதியான மற்றும் போக்குவரத்து நிறைந்த பகுதி கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதி ஆகும்.

தற்போது கரோனா பரவல் காரணமாக பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி ஆகிய நகர்ப் பகுதிகளில் உள்ள கடைகள் ஒரு வாரகாலம் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்காக அதிராம்பட்டினம் பகுதிக்கு வருகை தர ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று (ஜூலை24) காலை 7 மணி அளவில் கிழக்கு கடற்கரைச் சாலையின் மையப்பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு சென்ற ஓட்டுநர் அரைமணி நேரமாகியும் வரவில்லை.

இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து முற்றிலுமாக அரை மணி நேரம் தடைபட்டது.

பின்னர் எங்கிருந்தோ வந்த அந்த லாரியின் ஓட்டுனர் அந்த லாரியை எடுத்துச் சென்ற பிறகுதான் போக்குவரத்து சீரானது. லாரி டிரைவர் லாரியை சாலையின் குறுக்கே நிறுத்தி விட்டு ஒயின் ஷாப்புக்கு மது பாட்டில் வாங்க சென்றதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: 'திமுகவில் யாரையும் வளர விடுவதில்லை' அதிமுகவில் இணைந்த முன்னாள் ஒன்றியக் குழு தலைவர்!

ABOUT THE AUTHOR

...view details