தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் பாடப்புத்தகம் - video lessons

சென்னை: அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கு 15ஆம் தேதி முதல் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை
பள்ளிக்கல்வித்துறை

By

Published : Jul 14, 2020, 6:36 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தக் கல்வி ஆண்டிற்கான பாடப் புத்தகங்கள், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி மணவர்களுக்கு நாளை(ஜூலை.15) முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீடியோ பாடங்களும் வழங்கப்படும் என்பதால். பள்ளிக்கு வரும்போது 12ஆம் வகுப்பு மாணவர்கள் கட்டாயம் லேப்-டாப் எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்கும்போது, அரசாணையின் படி வழிகாட்டு மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதில்,"அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்கள் வீதம் அழைக்கப்பட வேண்டும் .

எனவே, இன்று(ஜூலை.14) மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நேரம் ஒதுக்கி, அதற்கான தகவலை மாணவர் அல்லது மாணவரின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட வேண்டும் . அப்போது தான் ஜூலை 15 ஆம் தேதியன்று காலதாமதமின்றி மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்க முடியும்.

கோவிட் 19 கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் ( Containment Zone ) மாணவர் எவரேனும் இருப்பின் அவர்களுடைய தனிமைபடுத்தப்பட்ட கால அளவு ( Quarantine Period ) முடிந்த பிறகு பள்ளிக்கு வரவழைத்து பாடநூல்கள் வழங்க வேண்டும் .

பாடநூல்கள் பெறுவதற்காக வரும் மாணவர்கள் / பெற்றோர்கள் முககவசம் அணிந்து வருமாறு தெரிவிக்க வேண்டும். பாடநூல்கள் வழங்கும்போது தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட வேண்டும் . பள்ளியின் நுழைவாயிலில் கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் .

மாணவர்கள் பள்ளிக்கு வருகைபுரியும்போது, அவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளை கொண்டு வரவேண்டும் . மடிக்கணினியின் மேற்புறம் மாணவரின் பெயர் மற்றும் வகுப்பு ஆகிய விவரங்கள் எழுதி ஒட்டப்படவேண்டும்.

மடிக்கணினியை Full Battery Charge செய்து எடுத்து வரவேண்டும் . இதுகுறித்து பொறுப்பு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்னரே தெரிவிக்க வேண்டும்.

HiTech Lab மூலம் Video Lesson களை பதிவிறக்கம் செய்யும்போது மாணவர்களோ அல்லது அவர்களின் பெற்றோர்களுக்கோ HiTech Lab உள்ளே செல்ல அனுமதி இல்லை . மாணவர்களுக்கு பதிவிறக்கம் செய்து தருவதற்காக நியமிக்கப்பட்ட முதுகலை பாட ஆசிரியரோ அல்லது கணினி ஆசிரியரோ மாணவர்களிடமிருந்து Laptop ஐ பெற்றுக் கொண்டு பதிவிறக்கம் செய்து தரவேண்டும் .

பதிவிறக்கம் செய்யும்போது மாணவர்கள் அருகாமையில் உள்ள வகுப்பறையில் தகுந்த இடைவெளியில் அமர வைக்கப்பட வேண்டும் . பதிவிறக்கம் செய்து முடித்த உடன் மாணவர்களின் மடிக்கணினியை அவர்களிடம் திருப்பித் தந்து, அவர்களை வீட்டிற்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்" என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details