ஈரோடு மாவட்டம் அசோகபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் அப்பகுதியில் தேநீர் கடை ஒன்றை நடத்திவந்தார்.
இந்தக் கடை அருகே ஜவுளிச்சந்தை, வியாபார நிறுவனங்கள், மக்கள் குடியிருப்பு காணப்பட்டதால் வியாபாரம் நல்ல நிலையில் சென்றுகொண்டிருந்தது.

இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக தேநீர் கடை திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஆறுமுகம், தற்போத தனது கடையை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “கடந்த இரண்டு ஆண்டுகளாக தேநீர் விற்பனையில் ஈடுபட்டு வந்தேன். இன்று கரோனாவால் தெருவுக்கு வந்துவிட்டேன். எனக்கு வந்த நிலை யாருக்கும் வரக்கூடாது” என்றார்.
இதையும் படிங்க: இணையம் மூலம், கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்