திருப்பூர்: தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நாளை (ஜூலை 5) அறிவிக்கப்பட்டுள்ளதால் மதுபானக் கடைகள் திறக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது.
இதனால் இன்றே மது குப்பிகளை வாங்கி குவிக்கும் நோக்கில் மதுப் பிரியர்கள் மதுபானக் கடைகளில் குவிந்தனர். திடீரென குவித்தவர்களை கட்டுப்படுத்த, வரிசையில் நிற்கும்படி கடை ஊழியர்கள் வற்புறுத்தினர்.
அதனையடுத்து மதுப் பிரியர்கள் வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். என்றாலும் மதுபானம் வாங்க அனைவரும் முண்டியடித்ததால் தகுந்த இடைவெளி என்பது கேள்விக்குறியாக மாறியது.
கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் இது போன்று தகுந்த இடைவெளியின்றி மதுப் பிரியர்கள் குவிந்தது பொதுமக்களிடையே நோய்த் தொற்று பயத்தை ஏற்படுத்தியுள்ளது.