இதுகுறித்து தையல் தொழிலாளி சந்திரகலா கூறுகையில், "குமரி மாவட்டத்தில் ஐந்தாயிரத்து 586 தையல் தொழிலாளர்கள் உள்ளனர்.
இவர்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
எனவே தையல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் தொகையை வழங்கக் கோரி தமிழ்நாடு முதமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இது தொடர்பாக மனு ஒன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கியுள்ளோம்.
எனவே தையல் தொழிலாளர்களுக்கு உடனடியாக அரசுஓய்வூதியத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கரோனா காலத்தில் தையல் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு இதுவரை உதவித்தொகை ஏதும் அறிவிக்கவில்லை. எனவே உடனடியாக தையல் தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க அரசு முன் வர வேண்டும்" என்றார்.