சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட குப்பை கிடங்கு உள்ளது. இங்கு, அப்பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்கும், மக்காத குப்பைகள் கொட்டப்படுகின்றன.
இந்நிலையில், இன்று (ஏப்.23) காலை திடீரென குப்பைக் கிடங்கில் தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியதில் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
மேலும், மின்சார வாரியத்தின் துணை மின் நிலையம் அருகே தீ விபத்து ஏறட்டதால், அப்பகுதியில் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கபட்டது.
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது சமூக விரோதிகளின் செயலால் ஏற்பட்டதா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.