நாமக்கல்லில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி, செயலாளர் வாங்கிலி ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், "கரோனா பொது முடக்கத்தால் சரக்கு போக்குவரத்து தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 100 விழுக்காடு சரக்கு போக்குவரத்து தொடங்கப்படாத நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை கடந்த ஒன்பது நாள்களாக 4 ரூபாய் 50 காசுகள்வரை உயர்த்தியிருப்பதை கடுமையாக கண்டிக்கிறோம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு - மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டனம் - மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கடும் கண்டனம்
நாமக்கல்: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல் அதற்கு மத்திய, மாநில அரசுகள் வரியை விதித்து மக்களின் மேல் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9 நாள்களாக தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாய் 50 காசுகளுக்கு மேல் உயர்த்தி இருப்பதை உடனடியாக திரும்ப பெறவேண்டும். கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறைவாக உள்ள நிலையில் இந்த விலை உயர்வு மோட்டார் வாகன தொழிலை கடுமையாக பாதிக்கும்" என குறிப்பிட்டுள்ளனர்.