தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மருத்துவர்களை அவமானப்படுத்திய காவல்துறையினருக்கு நோட்டீஸ்! - today news

ராமநாதபுரத்தில் கரோனா சிகிச்சை மைய பணிக்கு வந்திருந்த மருத்துவர்களை, டி.எஸ்.பி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மதுரை டிஐஜி-க்கு தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

police insulting doctors
police insulting doctors

By

Published : Apr 29, 2021, 10:07 PM IST

பரமக்குடி அரசு கலைக் கல்லூரி, கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு ஊர்களில் இருந்து மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். கரோனா சிகிச்சை மைய பணிக்காக வந்திருந்த சாயல்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மணிகண்டன், பார்த்திபனூர் மருத்துவர் விக்னேஷ் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் (ஏப் 27) இரவு 8:30 மணிக்கு உணவருந்த கடைக்குச் சென்றுள்ளனர்.

அங்கு வந்த பரமக்குடி டிஎஸ்பி வேல்முருகன், இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வெளியில் காக்க வைத்துள்ளார். தகவலறிந்த மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் தலையிட்டதை அடுத்து, நள்ளிரவு 1 மணிக்கு இரண்டு மருத்துவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், இதுசம்பந்தமாக இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்கும்படி மதுரை டிஐஜி-க்கு உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details