சென்னையில் கரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளதால், அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. சென்னையிலுள்ள 15 மண்டலங்களுக்கும் அமைச்சர்கள் தலைமையிலான குழு அமைத்து தடுப்புப் பணிகள், மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
'மருத்துவக் கழிவுகளை அகற்ற நடமாடும் எரியூட்டு வாகனம்' - அமைச்சர் வேலுமணி - minister velumani
சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் பயன்படுத்தும் மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணியை எளிதாக்க நடமாடும் எரியூட்டு வாகனம் வாங்கப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
மருத்துவ கழிவுகளை அகற்ற எரியூட்டு வாகனம்- அமைச்சர் வேலுமணி
இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பயன்படுத்தும் முகக் கவசம் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள், மருத்துவர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் பயன்படுத்தும் மருத்துவக் கழிவுகள் சென்னையில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
இவற்றை உடனடியாக அகற்ற நடமாடும் எரியூட்டும் வாகனம் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.