அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மாடிசன் ஸ்கொயர் கார்டனில் புகழ் பெற்ற ‘கிராப்பில் அட் தி கார்டன்’ என்ற மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. இதில், முதல் நிலை வீரரும், இந்திய வீரருமான பஜ்ரங் பூனியாவை கலந்துகொள்ளுமாறு, அமெரிக்க மல்யுத்த சம்மேளனம் அழைப்பு விடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து, இந்திய வீரர் பஜ்ரங் பூனியாவும் இப்போட்டியில் பங்கேற்றார்.
மல்யுத்தம்: அமெரிக்க வீரரிடம் போராடி வீழ்ந்த பஜ்ரங் பூனியா - மல்யுத்தம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ‘கிராப்பில் அட் தி கார்டன்’ என்ற மல்யுத்த போட்டியில், இந்திய வீரர் பஜ்ரங் பூனியா, அமெரிக்க வீரர் யியானி டியாகோமிஹாலிஸிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.
அமெரிக்க வீரரிடம் போராடி வீழ்ந்த பஜ்ரங் பூனியா
65 கிலோ ஃப்ரீ ஸ்டைல் பிரிவில், அமெரிக்காவின் தேசிய சாம்பியனான யியானி டியாகோமிஹாலிஸுடன் (Yianni Diakomihallis) அவர் மோதினார். இதில், 8-10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் பூனியா போராடி தோல்வி அடைந்தார். இருப்பினும், இந்தத் தொடரில் பங்கேற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.