''காப்பான்" படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சூரரைப் போற்று'. சுதா கொங்கரா இயக்கியுள்ள திரைப்படத்தில், அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சத்தமே இல்லாமல் சென்சாருக்கு சென்ற சூரரைப் போற்று - கோலிவுட் லேட்டஸ்ட் செய்திகள்
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் சென்சார் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்த நிலையில் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஊரடங்கு காரணமாக படத்தின் வெளியீடு தற்காலிகமாக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'சூரரைப் போற்று' திரைப்படத்திற்கு சென்சார் போர்டு யூ சான்றிதழ் வழங்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு சூரரைப் போற்று படம் வெளியாகும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.