இது குறித்து அவர் கூறுகையில்,
"இம்முறை உலகக் கோப்பை தொடரை வெல்ல ஆஸ்திரேலிய அணி வேண்டுமானாலும், ஃபேவரைட் இல்லாமல் இருக்கலாம். ஆனால், மற்ற அணிகள் அனைவரும் ஆஸ்திரேலிய அணியைக் கண்டு பயப்படுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு ஆஸ்திரேலிய அணியின் ஆட்டத்திறன் குறித்து நன்கு தெரியும். கடந்த ஓராண்டு காலமாக வேண்டுமானால் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மோசமாக விளையாடி வரலாம்.
ஆனால், இம்முறை வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். இந்தத் தொடரில் இவர்களது வருகை நிச்சயம் மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி, மற்ற அணிகளை துவம்சம் செய்யும். இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக, உலகக் கோப்பை தொடரை கைப்பற்ற இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்குதான் அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன" என்றார்.
12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் தொடங்குவதற்கு இன்னும் ஒன்பது நாட்கள் மட்டுமே உள்ளன. நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்தோடு பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இடம்பெற்றுள்ளது, அந்த அணியின் பேட்டிங் மட்டுமில்லாது, கோப்பையை தக்கவைக்க முடியும் என்ற நம்பிக்கையும் பலப்படுத்தியுள்ளது.
தற்போது, ஸ்டீவ் வாக்கின் கருத்தினால், ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோரின் ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து, உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலிய அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை சந்திக்கிறது. இப்போட்டி ஜூன் 1ஆம் தேதி பிரிஸ்டோல் நகரில் நடைபெறவுள்ளது. ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 1999இல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.