தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'யசோதா' குறும்பட டீசரை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்! - கோலிவுட் செய்திகள்

நாசர், ஸ்ரீப்ரியா இணைந்து இயக்கியுள்ள யசோதா குறும்படத்தின் டீசரை நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்டுள்ளார்.

Yasodha
Yasodha

By

Published : Jun 19, 2020, 3:32 PM IST

நாசர், ஸ்ரீப்ரியா இணைந்து இயக்கியுள்ள குறும்படம் 'யசோதா'. இதில் ஸ்ரீப்ரியா, நாசர், நித்யா, ஸ்ரீகாந்த், பானு பிரகாஷ், சோனியா போஸ், சிவகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இக்குறும்படத்தின் டீசரை இன்று நடிகை ஸ்ருதி ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து படக்குழுவினர் கூறுகையில், "குறும்படம் என்ற கட்டுக்குள் அடங்கினாலும், நெஞ்சைத் தொடும் வகையில் அமைந்த நிறைவான படமாக இது இருக்கும் .

ஊரடங்கு காலத்தில் ஒரு குடும்பத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களை ஆழமாக விவரிக்கிறது 'யசோதா'.

ஸ்ருதிஹாசன் வெளியிட்ட குறும்படம் டீசர்

சென்னையில் வசிக்கும் ஸ்ரீதர்- கஸ்தூரி தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. தேசிய அளவிலான ஊரடங்குக்கு சற்று முன்னதாக, வீட்டு வேலைக்காரப் பெண் பொறுப்பில் மனைவியை விட்டுவிட்டு, சொந்த ஊரிலிருக்கும் தன் வயதான தாயாரை பார்க்கப் புறப்படுகிறார் ஸ்ரீதர். ஊரடங்கு காரணமாக சென்னைக்கு திரும்ப இயலாத நிலையில், ஸ்ரீதரால் தன் மனைவியையோ வேலைக்காரப் பெண்ணையோ தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

எங்கே கஸ்தூரி போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இக்குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக" படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details