பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான அஃப்ரிடி, தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து கேம் சேஞ்சர் என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார். அந்த புத்தகத்தில், அஃப்ரிடி, சக வீரர் வக்கார் யூனிஸ், ஜாவித் மியான்தாத், இந்திய வீரர் கவுதம் கம்பிர் உள்ளிட்ட வீரர்கள் குறித்து கடுமையாக விமர்சித்து, சர்ச்சையில் சிக்கினார்.
இதையடுத்து, தன்னை குறித்து விமர்சித்த அஃப்ரிடிக்கு கவுதம் கம்பிர் ட்விட்டரில் தக்க பதிலடி கொடுத்துள்ளார். தற்போது, அவரது வரிசையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் ஃபர்ஹத்தும் இணைந்துள்ளார்.
அஃப்ரிடி குறித்து அவர் வரிசையாக ட்வீட்டுகளை பதிவு செய்து அவரது முகத்திரையை கிழித்துள்ளார். அதில், பாகிஸ்தான், கிரிக்கெட்டில் கெட்ட பெயர் பெற்றதற்கான காரணங்களை அவர் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பட்டதை போலவே, பாகிஸ்தான் கிரிக்கெட் சீரழந்ததற்கு, அவர்தான் முக்கிய காரணம் என குறிப்பிட்டார்.