கரோனா தொற்று பரவலை தடுக்க சென்னையில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. வடசென்னை பகுதிகளில் கரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே இருக்கிற சூழலில் இதை கட்டுப்படுத்த அதிரடிப்படை குவிக்கப்பட்டு வடசென்னை முழுவதையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தேவையின்றி வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல் - காவல் துறை அதிரடி நடவடிக்கை - Vehicle seized
சென்னை: சோதனைச் சாவடிகள் அமைத்து தேவையின்றி வெளியே வரும் வாகன ஓட்டிகளின் வாகனங்களை பறிமுதல் செய்து காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தேவையின்றி வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல் - போலீசார் அதிரடி நடவடிக்கை
மேலும் வடசென்னை பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து காரணமில்லாமல் வெளியே சுற்றும் வாகன ஓட்டிகளை காவல் துறையினர் எச்சரித்தும் அவர்கள் வாகனத்தை பறிமுதல் செய்தும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் தங்க சாலையில் சோதனைச் சாவடி அமைத்து காரணமில்லாமல் சுற்றித்திரியும் வாகனங்களை பறிமுதல் செய்துவருகின்றனர். இதனால் அங்கு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.