தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கத்தியைக் காட்டி ஜவுளிக் கடையில் கொள்ளை! - கத்தியைக் காட்டி துணிகளை திருடியவர்களுக்கு வலை வீச்சு

மதுரை: ஜவுளிக்கடையில் கத்தியைக் காட்டி, துணிமணிகளை பட்டப்பகலில் கொள்ளையடித்துச் சென்ற ஆசாமிகளை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

துணிகளை திருடியவர்களுக்கு காவல் துறையினர் வலை
துணிகளை திருடியவருக்கு வலை

By

Published : Jun 11, 2020, 1:43 AM IST

மதுரை மாநகரின் செல்லூர் பகுதியில் குரு என்பவருக்குச் சொந்தமான ஜவுளிக் கடை ஒன்று உள்ளது.

இந்த ஜவுளிக் கடையில் துணி வாங்குவதுபோல், வந்த இரண்டு இளைஞர்கள் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள துணிகளை எடுத்துக்கொண்டு, பணம் கொடுக்காமல் ஊழியரிடம் கத்தியைக் காட்டி, மிரட்டி தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த செல்லூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனடிப்படையில் அப்பகுதியைச் சுற்றி திரிந்த இரண்டு இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருகின்றனர்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்தச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details