தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணைத் தாக்குதல் - ஈராக் தற்போதைய செய்தி

பாக்தாக்: ஈராக் தலைநகர் பாக்தாக்கிலுள்ள அமெரிக்க தூதரகம் அருகே தற்போது ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

rockets hit near US embassy
rockets hit near US embassy

By

Published : Jan 26, 2020, 11:31 PM IST

Updated : Jan 26, 2020, 11:54 PM IST

இம்மாதத் தொடக்கத்தில் ஈராக்கிலுள்ள பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி உள்ளிட்ட எட்டு பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்காக அமெரிக்காவை கண்டிப்பாக பழிவாங்குவோம் என்று ஈரான் அறிவித்தது.

இதையடுத்து அவ்வப்போது, ஈராக்கிலுள்ள அமெரிக்கா படைகள் மீது ஈரான் தாக்குல் நட்த்திவருகிறது. இரு நாடுகளுக்கிடையே இப்போது உச்சகட்ட போர் பதற்றம் நிலவிவருகிறது.

இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே தற்போது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாக்தாத்தில் பெரும்பாலான வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள இடத்தில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்த சத்தம் கேட்கப்பட்டதாக உறுதிபடுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் மூன்று முதல் ஐந்து ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இந்தத் தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை.

இதையும் படிங்க: பிரெக்ஸிட் நாணயம் வெளியீடு!

Last Updated : Jan 26, 2020, 11:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details