தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பாடத்திட்டத்தில் மதவாத கருத்துக்கள்: இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம் - சேலம் மாவட்ட செய்திகள்

சேலம்: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மதவாத கருத்துக்கள் திணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாடத்திட்டத்தில் மதவாத கருத்துக்கள் திணிப்பு இந்திய மாணவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
பாடத்திட்டத்தில் மதவாத கருத்துக்கள் திணிப்பு இந்திய மாணவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

By

Published : Jul 18, 2020, 1:15 AM IST

மத்திய அரசு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மதவாத கருத்துக்களை திணிப்பதை உடனே நிறுத்த வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ் மாநில தலைவர் ஏ.டி.கண்ணன் கூறுகையில், " மத்திய அரசு கல்வித் துறையில் பல்வேறு குளறுபடிகளை செய்து வருகிறது.நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தால் மக்கள் பல்வேறு வழிகளில் முடக்கப்பட்டு உள்ளனர் .

இந்தச் சூழலில் கல்வி துறையில் மத்திய மாநில அரசுகள் தற்கால சூழலில் சூழலுக்கு ஏற்ப முடிவு எடுப்பதில் தடுமாற்றம் கொண்டுள்ளது. கல்லூரி மாணவர்களும் தங்கள் இறுதி ஆண்டு தேர்வினை இணைய உலகில் கட்டாயம் எழுதிட வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தேர்தலை நடத்துவதற்காக அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது .

இது மிகப்பெரிய கார்ப்பரேட் கொள்ளை நடப்பதற்கு வழி வகுக்கிறது . நோயைக் கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டாமல் அரசுகள் மாணவர்கள் மீது நெருக்கடியை சுமத்தியுள்ளது. அதேபோல சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் கரோனோ பிரச்சனையை கருத்தில் கொண்டு 30 விழுக்காடு பாடத்திட்டத்தை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

ஆனால் அதில் தனது மதவாத அரசியல் பாடத்திட்டத்தை இணைத்துள்ளது. குறிப்பாக பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஜனநாயகம் பன்முகத் தன்மை போன்ற பாடப் பிரிவும் பதினோராம் வகுப்பில் கூட்டாட்சி குடியுரிமை மதச்சார்பின்மை ஆகிய பாடப் பிரிவுகளும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன .

தந்தை பெரியார் சிந்தனைகள் , தமிழக பெண்களை சிறப்பாக விளக்கும் பாடத்திட்டமும் நீக்கப்பட்டுள்ளது. திருக்குறள், சிலப்பதிகாரம், இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர் பங்கு என்னும் பகுதியும் அடியோடு நீக்கப்பட்டுள்ளது.

இதனை உடனடியாக மத்திய அரசு வாபஸ் பெற்று நீக்கப்பட்ட பாடத் திட்டத்தை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று மாநிலம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியரிடமும் நாங்கள் கோரிக்கை மனு அளித்து இருக்கிறோம் "என்றார்.

ABOUT THE AUTHOR

...view details