தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

காணொலி காட்சி மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் வருடாந்திர கூட்டம் - Reliance yearly meet

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் வருடாந்திர கூட்டத்தில் சமர்பிக்க உள்ள 2019-20ஆம் ஆண்டுக்கான அறிக்கை குறித்த விவரங்கள், அந்நிறுவன உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

By

Published : Jun 23, 2020, 5:06 PM IST

Updated : Jun 23, 2020, 5:35 PM IST

டெல்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 43ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் ஜூலை 15ஆம் தேதி பகல் 2 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வது அல்லது தீர்மானங்களில் வாக்களிப்பதற்கான உறுப்பினர்களை முடிவு செய்வதற்கான கட்ஆஃப் தேதி ஜூலை எட்டாம் தேதி என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோவில் முதலீடு செய்யும் 11ஆவது நிறுவனம்!

இதேபோல் பங்குகள் மீதான ஈவுத் தொகை பெறுவதற்கு தகுதியுள்ள உறுப்பினர்களை நிர்ணயிப்பதற்கான கெடு ஜூலை 3ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண்டுப் பொதுக்கூட்டம் நடந்து முடியும் ஒரு வாரத்தில் தகுதியான நபருக்கு ஈவுத் தொகை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கூட்டத்தில் சமர்பிக்க உள்ள 2019-20ஆம் ஆண்டுக்கான அறிக்கை குறித்த விவரங்கள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jun 23, 2020, 5:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details