கரோனா நோய்த்தொற்றின் காரணமாக, இந்தியா முழுவதும் மார்ச் மாதம் முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
ஊரடங்கு உத்தரவின் காரணமாக, தமிழ்நாட்டிலுள்ள மக்கள் பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.
கரோனா நோய்த்தொற்றின் காரணமாக, இந்தியா முழுவதும் மார்ச் மாதம் முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
ஊரடங்கு உத்தரவின் காரணமாக, தமிழ்நாட்டிலுள்ள மக்கள் பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.
இதனால், ரஜினி மக்கள் மன்றம் சார்பாக, தமிழ்நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ரஜினி மக்கள் மன்றம் சார்பாக, திருப்பரங்குன்றம் பகுதியில் 5 இடங்களில் நடைபெற்ற கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில், 500 ஏழை, எளிய மக்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் உள்ளடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும் ரஜினியின் அறிவுறுத்தலின்படி, மதுரை மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக, ரஜினி மக்கள் மன்றம் சார்பாக, அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.