அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ஐம்பதாவது பிறந்த நாள் விழா இன்று தமிழ்நாடெங்கும் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்படுகிறது.
ராகுல் காந்தியின் பிறந்த நாள்: விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் - Rahul Gandhi birthday celebration in perambalur district
பெரம்பலூர்: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் தலைவர் தமிழ்ச்செல்வன், தெலங்கானா மாநில தேர்தல் பொறுப்பாளர் ஜான் அசோக் வரதராஜன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்தனர்.
தொடர்ந்து இந்திய - சீன எல்லையில் வீர மரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளும் விதைகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.