2019ஆம் ஆண்டுக்கான ரோம் ஓபன் டென்னிஸ் தொடர், இத்தாலியின் தலைநகர் ரோம்-இல் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால், சக நாட்டைச் சேர்ந்த ஃபெர்னான்டோ வெர்டாஸ்கோ (Fernando Verdosco) உடன் மோதினார்.
டென்னிஸ் : அரையிறுதியில் நடால் - சிட்சிபாஸ்
ரோம் ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
டென்னிஸ் : அரையிறுதியில் நடால்
முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றிய நடால், இரண்டாவது செட்டை 6-0 என்ற கணக்கில் லாவகமாக வென்றார். இதன் மூலம், நடால் 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் .இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் நடால், கிரீஸ் வீரர் சிட்சிபாஸை எதிர்கொள்ள உள்ளார்.