புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள மின்துறை தலைமை அலுவலகம் முன்பு மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்துறை தனியார் மயமாக்கலை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! - Puducherry latest news
புதுச்சேரி: மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Protest
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். உடனடியாக தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்தக்கட்டமாக தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.